பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014

நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்யுமறு சர்வதேச போலீசான இன்டர்போலிடம் வேண்டுகோள் 
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் இருந்து அவ்வாறு செயற்படும் சில நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய நபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப வவுனியாவில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட கோபி உட்பட மூவருக்கு நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோரே ஐரோப்பாவில் இருந்து நிதி வழங்கியதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.