பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014

தென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்கு விஜயம்!- கூட்டமைப்புக்கும் - அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜொஹானஸ்பேர்க்கில் வைத்து அவரை சந்தித்த போது, இதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கின் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கை வருவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும், இதன் போது அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.