பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


பௌத்த பிக்குகள் துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர்!– மல்வத்து பீடாதிபதி  நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பௌத்த பிக்குகள், துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டையும், இனத்தையும்
, மதத்தையும் பாதுகாக்கும் எண்ணத்தில், பௌத்த பிக்குகள் பிக்கு கௌரவத்தை பேணாது செயற்படுகின்றனர். நாட்டில் இடம்பெறும் அநீதிகளை அரசாங்கம் உரிய முறையில் தட்டிக் கேட்பதில்லை. இதன் காரணமாகவே பௌத்த பிக்குகள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்த வேண்டியேற்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து பொறுப்பு வாய்ந்தவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. நாட்டில் எத்தனை அமைச்சர்கள் இருந்தாலும், இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்த எவரும் முன்வருவதில்லை. அரசாங்க அதிகாரிகள் என்று ஒரு தரப்பினர் இருக்கின்றார்கள், அவர்களும் அமைச்சர்களைப் போன்றே பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை. பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து பலர் முறைப்பாடு செய்கின்றனர். அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் பௌத்த பிக்குகள், பிக்கு கௌரவத்தை புறந்தள்ளி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார். பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள், கண்டியில் மல்வத்து பீடாதியை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போதே மல்வத்து பீடாதிபதி இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.