பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான நெய்ல் சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இன்று.
டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கும் முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளராக திகழ்ந்த நெய்ல் சண்முகம் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
காலஞ்சென்ற நெய்ல் சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை பொரள்ளையில் நடைபெறவுள்ளன.
இறக்கும் போது அவருக்கு 73 வயது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் மரணமானார்.
இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட காரணமாகவிருந்தவர்களில் சண்முகமும் ஒருவராவார்.
1960களில் அவர் விளையாடிய இலங்கை அணி, இந்திய அணியையும் பாகிஸ்தான் அணியையும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்தது.
1964 ஆம் ஆண்டு சண்முகம் பங்கேற்ற இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை நான்கு நாள் டெஸ்ட் போட்டி ஒன்றில் 41 ஓட்டங்களால் தோற்கடித்தது.
இதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் சண்முகம் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இடம்பெற்ற முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் சண்முகம் பங்கேற்ற இலங்கை 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
1967 ஆம் ஆண்டு, 10 விக்கெட்டாக சென்ற சண்முகம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அரை சதத்தை பெற்ற சாதனையும் இடம்பெற்றத.
1984 ஆம் ஆண்டு அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இங்கிலாந்துக்கு சென்றிருந்தார்.