பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

இலங்கையை துண்டாட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றியளிக்காத முயற்சிகள்: இராணுவ தளபதி
நாட்டை பிரிப்பதற்கான வெற்றியளிக்காத பல்வேறு முயற்சிகள் வெளிநாட்டிலும்> உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமாதானம் மற்றும் மறுசீரைமப்பு நடவடிக்கைகளை குழப்பியடிப்பதற்காக பிரிவினைவாதிகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை தகர்த்தெறிய இலங்கை இராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதுவருடப் பிறப்பை பயன்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான சிறந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.