பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014


தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு சில நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் 15 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுகளிடம் கோரியுள்ளது.
1373ம் இலக்க ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அடிப்படையில் புலி ஆதரவு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை ஆகியன மட்டும் பிரிட்டனில் எட்டு பிரதான வங்கிகளில் கணக்குகளை பேணி வருகின்றன.
புலிகளின் சுவிஸ் வலையமைப்பு இரண்டு சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை பேணி வருகின்றன.
தடைகளை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தடையை இலங்கை அரசாங்கமே நீக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தடை காரணமாக எதிர்வரும் காலங்களில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் குறித்த அமைப்பின் பிரதிநிதிகளினால் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.