பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014

அசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது!- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
வடக்கில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகவும்,  அதற்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்ற 510 மாணவர்களுக்கான மஹாபொல புலமைப் பரிசில்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது யுத்தம் நிறைவடைந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தாமும் போராளியாக செயற்பட்டு பின்னர் அரசியலில் இருந்து வருகிறேன்.
வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது.
ஆனால் பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விடயங்களையும் பெற்றக் கொள்ள முடியும்.
எனவே குழப்பங்களுக்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.