பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2014


சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் பாமகவினர் 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்.

குமராட்சி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஐயாசாமி தலைமையில் சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை அதிமுக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள்
அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 கட்சி இணைந்த பாமக நிர்வாகிகளுக்கு செங்கோட்டையன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளான குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், திருவள்ளுவர் நகர் நகர்நல மேம்பாட்டு சங்கத் தலைவர் ஜி.வைத்தியநாதன், ஜி.வி.ராஜ்மோகன், கீரை.ராஜா, வாக்கூர் பட்டுசாமி, அர்ச்சுணன், கருணாமூர்த்தி, கணேசன், பொன்னிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.