பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2014

பொறுமையான துடுப்பாட்டம்:சுருண்டது மும்பை 




























மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
 
இதன் படி மும்மை அணி தனது (20)ஓவர்கள் நிறைவில் (6)விக்கெட்டுக்களை இழந்து (125) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மும்மை அணி சார்பான அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையாக  பொலார்ட் ஆட்டமிளக்காமல் (30)பந்துகளில் (2) சிக்ஸர்கள் அடங்களாக (30) ஓட்டங்களை பெற்றிருந்தார்.
 
                                                
 
 
பதிலுக்கு (126) ஓட்டங்களை வெற்றி ஓட்டமாக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி தனது (18.5) ஓவர்களில் (126) ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.
 
இன்றைய ஆட்டத்தை பொறுத்த வரையில் ஆரம்பம் முதலே டெல்லி அணி தனது பொறுமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது.
 
டெல்லி அணி சார்பில் களமிறங்கிய வீரர்களில் எம்.வீஜேய் (34) பந்துகளில் (40)ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
                                               
 
இதேபோல் பீற்ரர்ஷன் ஆட்டமிழக்காமல் (18)பந்துகளில் (26) ஓட்டங்களை பெற்றிருந்தார்.இவரின் இறுதிவரையான பொறுமையான துடுப்பாட்டம் டெல்லி அணியின் வெற்றிக்கு காரணம் எனலாம்.
 
                                               
 
 
 
 
மும்பை அணிசார்பாக பந்து வீசிய இலங்கை அணி வீரர் மலிங்க இன்றைய ஆட்டத்தில் (4) ஒவர்கள் அதிரடியான பந்து வீச்சின் மூலம் வெறுமனே (17) ஓட்டங்களை கொடுத்து (2) விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.