பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2014

ல்வி வளர்ச்சிக்கு வட மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் 
 கல்வி வளர்ச்சிக்கு வடமாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 
மாகாணத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாழில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது 
 
இதன்போது யாழ் பல்கலைகழகத்தில் பத்து துறைகளுக்கான பேராசிரியர்கள் பிரச்சினை மற்றும் வட மாகாணத்தில் நிலவும் கல்வி நிலை தொடர்பில் அறிந்துக் கொண்டதாக அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்கா தெரிவித்தார்
 
இதன்படி கல்வி அமைச்சினால் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பகல்வி மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி தொடர்பில் புதிய திட்டங்கள் வகுக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
மேலும் வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கள் தொடர்பிலும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.