பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014

வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை!– நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி.
வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கில் கைதுகள் ஓய்ந்தபாடில்லை.
இன்னமும் வடக்கு மக்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்து வருகின்றனர்.
இதனால் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வீடுகள் தொடர்ந்தும் சோதனையிடப்படுகின்றன.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நிலைமைகளில் மாற்றமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற நான்கு திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.