பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2014

ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் 
 யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பதில் தொழிலாளி ஒருவர் உதயன் ஒன்லைனுக்கு கருத்து தெரிவிக்கையில்-
 
மாநகர சபையில் வருடங்களாக பதில் தொழிலாளராக கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை அன்று நடைபெற்றது.
 

 
குறித்த நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் வழங்கும் அனுமதியை வடக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டு 5 மாதகாலமாகியும் நியமனங்களை வழங்க மாநகரசபை ஆணையாளர் தாமதம் செய்து வருகின்றார்.
 

 
 
நாங்கள் பல தடைவைகள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடிய போது நியமனங்களை இந்த மாதம்,அடுத்த மாதம் தருவதாக கூறிய போதிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.
 

 
நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்துக்கு மத்தியில் ஒருவேளை உணவுக்காக பெரும் சிரமப்பட்டு வருகின்றோம்.  எங்களுக்குரிய நிரந்தர நியமனத்தை தரும் வரை போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம்.