பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2014

கிளிநொச்சியில் விபத்து:ஒருவர் சாவு 
 கிளிநொச்சி நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தண்ணிர் போத்தல்கள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்துடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
 
 சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்