பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


வடமாகாண சபை உறுப்பினரின் வீடு உடைத்துக் கொள்ளை! ஒருவர் கைது
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது நகைகள் உட்பட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.