பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014

அடிச்சுதான் எனது மைத்துனர் கொல்லப்பட்டார்; மன்றில் சாட்சியம் 
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்னன் செட்டியார் என்பவரது மைத்துணர்
இன்று மன்றில் சாட்சியம் அளித்தார்.

எட்டியாந்தோட்டையை சேர்ந்த பாலகிருஷ்னன் செட்டியார் வாகனவிற்பனை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக தண்டனை பெற்று வந்திருந்தார்.

எனினும் கடந்த 19ஆம் திகதி இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

அதன்படி இதற்கான விசாரணை இன்று யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றில் பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது சாவடைந்தவருடைய மனைவி மற்றும் மைத்துனர் மன்றில் சாட்சியமளித்தனர். இறந்தவரின் மைத்துனர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

வாகன விற்பனை தொடர்பில் எனது மைத்துனர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 2வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்திருந்தார்.

எனினும் கடந்தவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டோம்.

எனினும் நேற்று எனது மைத்துனர் என்னுடன்  பேசினார். அப்போது சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் என்னைப் பிடிக்க மற்றவர் தாக்கினார் என்று கூறினார். எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என அவர் மேலும் தெரிவித்தார்.