பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014

யாழ்.மாவட்ட அணியினர் கூடைப்பந்தில் சம்பியன்
சுன்னாகம் பொலிஸாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து  புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்திய பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

மருதனாமடம் இராமநாதன் கல்லூரி  கூடைப்பந்தாட்ட மைதானத்தில கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியும்,  யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியும்  மோதிக்கொண்டன.
இரு அணிகளும் பலம் மிக்க அணிகளாகக் காணப்பட்ட நிலையில்  மாவட்ட அணி 17 : 14 புள்ளிகள் என்ற  நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் மாவட்ட அணி சமநிலை பெற்ற நிலையில் 10:08 புள்ளிகள் என்ற நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணி 27: 22  புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.