பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014

யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு 
 சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

 
யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைக்காவலரால் தாக்கப்பட்டதால் மூச்சுத்தினரல் ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் கைதி உயிரிழந்துள்ளார்.
 
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபரின் மூளை நரப்புப் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டமையாலேயே உயிரிழக்க நேர்ந்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்சம்பவத்துடன் தொடர்புடைய சிறைக்காவலரை இடைநிறுத்தம் செய்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.