பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014

தனியார் வங்கியில் ரூ.14 இலட்சம் துணிகரக் கொள்ளமுகாமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
 
இந்தச் சம்பவம் சீதுவை, லியனகே முல்ல பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 
 
சீதுவை பிரதேசத்தில் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் தனியார் வங்கியில் ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதிகாலை வேளை முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த நால்வர் திடீரென வங்கிக்குள் புகுந்து இரவு நேர கடமையில் இருந்த வங்கி முகாமையாளரை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு 14 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
இந்தச் சம்பவத்தின்போது கத்திக்குத்துக்கு இலக்கான மேற்படி வங்கியின் முகாமையாளர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
14 இலட்சம் ரூபா பணமே கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக காயமடைந்த வங்கி முகாமையாளர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜி- 239037451தொடக்கம் ஜி- 239037500என்ற தொடரிலக்கத்தை உடைய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களே கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தனர் பொலிஸார்.
 
மேற்படி இலக்கங்களுடைய நாணயத் தாள்கள் புழக்கத்தில் வந்தால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.