பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014

பொது பல சேனாவில் ஒரு மில்லியன் பேர் - கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு
ஒரு மில்லியன் நபர்களை  சேர்த்துள்ளதாக  கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது . 
 
“Awake, through the vision of Dampal!” என்ற திட்டத்தின் மூலம் ஒரு மில்லியனுக்குஅதிகமானவர்களை சேர்த்துள்ளதாக பொது பல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் . 
 
ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலே இதனை அவர் தெரிவித்துள்ளார் .
 
’2016 ஆண்டில் மன்னனை  நாம் தீர்மானிப்போம்.  இது ஒரு அமைதியாக பயணம். வெறுமனே “மும்மணிகளை வணங்குவதால் மட்டும் இதை செய்ய முடியாது. பௌத்தத்தை புவியல்ரீதியிலும், பிராந்தியரீதியிலும் நாம் பாதுகாக்கவேண்டும். 
 
மஹிந்த ராஜபக்ஷ உண்மையில் இந்த விடயத்துக்கு அர்பணிப்புடன் செயல்படுவது உறுதி என்றால் நாம் அவருக்கு உதவுவோம். ஆனால் இன்னும்  ‘மேல்பூச்சு ‘ தீர்வுகள் மட்டுமே  உள்ளன  .
 
இது ஒரு சிங்களம் பெளத்த நாடு என்று நாம் சொன்னது  கிடையாது. ஆனால், நாட்டின் குடிமக்கள் என்றவகையில்  இந்த நாட்டின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களை நேசிக்க வேண்டும். அதனால் தான் நாம் ஒவ்வொரு குடிமகனும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற பொலிஸ்காரர் போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தோம்.
 
பொது பல சேனா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்று எப்படி நீங்கள் நிரூபிக்க முடியும் ? என கேட்கப்பட்டதுக்கு. பெளத்த கதையில் தீவிரவாதம் இல்லை என்றார்.