பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014

மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றோர்
சித்திரைப் புத்தாண்டையொட்டி சாவகச்சேரி நகரசபையினரும், சாவகச்சேரிப் பொலிஸாரும் இணைந்து நடத்தும் விளையாட்டுவிழாவின் ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகள் நேற்றுக் காலை இடம்பெற்றன.
 
ஆண்களுக்கான 10 கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டி சரசாலை கனகன்புளியடி சந்தியில் ஆரம்பித்து வேம்பிராய், புத்தூர் சந்தி, மீசாலை, சங்கத்தானை ஊடாகவும் , பெண்களுக்கான 5 கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டி மீசாலை, புத்தூர் சந்தியில் ஆரம்பித்து மீசாலை, சங்கத்தானை ஊடாகவும் சாவகச்சேரி பேருந்து நிலையம் வரை இடம்பெற்றது.
 
இரு இடங்களிலும் நகரசபைத் தலைவர் இ.தேவசகாயம் பிள்ளை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். போட்டிகளில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்களின் விவரம்வருமாறு:
 
ஆண்கள்
எஸ்.சுவர்ணன், ஏ.காண்டீபன், எஸ்.நிரோஜன், கே.ஜெயக்குமார், ஆர்.யுதிஸ்லன்.
 
பெண்கள்
ஏ. சிவஜெகதீபா, ஏ. அபிநயா, ஏ. மேரி அனிஸ்டா, எஸ். 
சர்மிளா, எஸ். தீபரஞ்சினி.
அனைவருக்கும் பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன.