பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2014

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் போலீசார் விசாரணை
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குழந்தைகள் உட்பட 10 பேரை இன்று காலை தனுஷ்கோடி கடற்கரையில், காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள் பிடித்தனர். கரைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் தனுஷ்கோடி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் மீண்டும் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விசாரணை என்ற பேரில், அழைத்துச் செல்லப்பட்ட பலர் வீடு திரும்பவில்லை என்றும் அவர்கள் கூறினர். அதனால், உயிருக்கு அஞ்சி தலைமன்னார் பகுதியிலிருந்து ஏஜெண்ட்களின் உதவியுடன் அவர்கள் படகில் தமிழகம் வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.