பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா காந்தி பிரிவு உபச்சார விருந்து
 


மக்களவை தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையின்
கீழ் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 14ம் தேதி பிரிவு உபச்சார விழா நடந்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன முன்னாள் அதிபர் வென் ஜியாபாவோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உட்பட, உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும், பிரதமர் மன்மோகன் சிங் பிரிவு உபசார கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமராக பதவி வகித்த காலத்தில், தன்னுடன் இணக்கமாக செயல்பட்டதை நினைவு கூர்ந்துள்ள மன்மோகன் சிங், அதற்காக அந்தத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 
பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரிவு உபசார கடிதத்திற்கு, சீனா முன்னாள் அதிபர் வென் ஜியாபாவோ, தன் கைப்பட பதில் கடிதம் எழுதி உள்ளார்.