பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


சுவிஸ் டென்னிஸ் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சாயிபிரசாந்த் ரவீந்திரன்

சுவிட்சர்லாந்து ஸ்போர்ட்ஸ் சென்டர் சூமாக்கர் சம்மர்  2014  (Sports Center Schumacher  Sommer Turnier 2014)சுற்று போட்டி நேற்று (10.05.2014)நடைபெற்ற போது  அதில் பங்கு பற்றிய புங்குடுதீவை சேர்ந்த  சூரிச் வாழ் தமிழ் இளைஞன் சாயிபிரசாந்த் ரவீந்திரன் ராசமாணிக்கம் இறுதியாட்டம் வரை தகுதி பெற்று   இறுதியாட்டத்தில்  A .Wisst ஐ 7-6,6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் .சாயிபிரசாந்த் காலிறுதி ஆட்டத்தில் Gerber  Michael ஐ W .O முறையிலும் அரையிறுதியாட்டத்தில் M .Kipfer  ஐ 6-1,6-2 என்ற இலகுவான  வெற்றியிலும் இறுதியாட்டத்தில் A .Wisst 7-6,6-3 என்ற ரீதியிலும் வென்று அசத்தி உள்ளார்.எந்த செட்டையும் எதிரி வெல்ல வாய்ப்பே கொடுக்காதது  சிறப்பானது .சுவிஸ் சாயி ரேடர் இராசமாணிக்கம் ரவீந்திரன் தயாளினி தம்பதியின் சிரேஷ்ட புத்திரனாகிய இவரது  திறமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்