பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014

உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு :14 வீரர்கள் பலி (வீடியோ இணைப்பு)
உக்ரைனின் இராணுவ ஹெலிகாப்டரை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனின் கிரீமியா மாகாணத்தை கடந்த மார்ச் 17ம் திகதி கைபற்றிய ரஷ்யா தனது போராளிகளால் தொடந்து அந்நாட்டை அச்சுருத்தி வந்ததால் உக்ரைனில் பதற்றம் நிலவி வந்தது.
இதனையடுத்து ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெக்ஸ்ட், லுகான்ஸ்க், ஹாரிசிவ் ஆகிய நகரங்களையும் கைபற்றுவதற்காக போரட்டம் நடத்தி வந்தனர்.
இதனால் இராணுவத்தினற்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையாக சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கிழக்கு உக்ரைனில் உள்ள சிலேவியான்ஸ்கில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ரஷ்ய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இராணுவ தலைமை அதிகாரி உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்தை உக்ரைனின் இடைக்கால ஜனாதிபதி ஒலேக்சந்த் டர்ச்சிநவ் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் போராளிகள் எவ்வித ஆயுதத்தை பயன்படுத்தினார்கள், ஹெலிகாப்டர் எந்த இடத்தில் விழுந்தது போன்ற தகவலை வெளியிடப்படவில்லை.