பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014

திருப்பதி கோவிலில் தலைமுடி ஏலம் மூலம் 239 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக
கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், பக்தர்களின் தலைமுடி காணிக்கை மூலம் தினமும் பல டன் முடி சேர்கிறது. அந்த முடிகளை சேகரிக்க பல இடங்களில் மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், அங்கு சேரும் முடிகள் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் மூலம் ஏலம் விடப்படும். கடந்த ஆண்டு தலைமுடி விற்பனை மூலம் ரூ.205 கோடி கிடைத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு தலைமுடி விற்பனை மூலம் ரூ.239.68 கோடி திருப்பதி கோவிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.34 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.