பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014


ஜாமின் பெற மறுப்பு: கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் சிறை
ஜூன் மாதம் 6ம் தேதி வரை சிறை வாசம் அனுபவிக்க, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


ஊழல்வாதிகள் பட்டியல் தொடர்பாக, நிதின் கட்காரி தொடுத்த வழக்கு தொடர்பாக, ஜாமின் பெற மறுத்த நிலையில், கெஜ்ரிவால், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.


அவரது, காவல் இன்றுடன் நிறைவுற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போதும், கெஜ்ரிவால், ஜாமின் பெற மறுத்து விட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவாலை வரும் ஜூன் 6ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.