பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2014

முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்க மறியல் 
  முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற  நீதிபதி யோய் மகிழ் மகாதேவா
இன்று உத்தரவிட்டுள்ளார்.
 
அச்சுவேலி  கதிரிப்பாயில் நேற்று முன்தினம்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
 
இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான பொன்னம்பலம் தனஞ்செயன் நேற்று கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.