பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014

தரவரிசையில் 1 ஆம் இடத்தை அடையும் வாய்பை இலங்கை இழந்தது  நேற்றைய  தோல்வியினால் .இனி வரும்   4 போட்டிகளில் 3 இல் வென்றால் இந்தியாவை பின்தள்ளி 2 ஆம் இடத்தை அடைய முடியும் 
இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 05.30 க்கு ஆரம்பமாகும் 50 ஓவர்களை கொண்ட இப்போட்டி 20௦ - 20 போட்டியினைப்  போன்றே இப்போட்டிகளும்  இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை கொண்டதாக அமையும் என தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐ.சீ.சீ ஒருநாள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
 
இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பிக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி 5 போட்டிகளையும் வெற்றிகொண்டால் 2ம் இடத்திலுள்ள இந்தியா, முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியா ஆகியவற்றை பின்தள்ளி முதலாமிடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
 
இதேவேளை இத்தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றால்  இலங்கை இந்தியாவைப் பின் தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது