பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

மட்டக்களப்பில் 450 மில்லியன் ரூபாய் செலவில் புற்று நோய் வைத்தியசாலை 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது.
 
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக அமைக்கப்படும் இந்த புற்று நோய் வைத்தியசாலையினால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
 
4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.