பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

யாழ். அரியாலையில் விபத்து -இளைஞன் சாவு 
A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
வைததியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
குறித்த இருவரும் மோட்டார் சையிக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணித்த நிலையில்  வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவவிடத்திலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.