பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

 
764 வழித்தட சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து ஒன்றினை காலவரையின்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வழித்தட பேருந்து சாரதிகளும், நடத்துநர்களும் இன்று காலை முதல் சேவையில் ஈடுபடாது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 

 
இது தொடர்பாக 764 வழித்தட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அமிர்தலிங்கம் கருத்து தெரிவிக்கையில்
 

 
60 ஸ்ரீ 5133 இலக்க பேருந்து மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குறித்த பேருந்தின் சாரதியும்,நடத்துநரும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
 
பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததாகவும்,விழுந்த மாணவனை மறுபடியும் ஏற்றிக்கொண்டு சென்றதாக பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த செய்தி.

சேவையில் ஈடுபடுவதற்கு நியமிக்கப்பட்ட நாள் அல்லாத வேறொரு நாளில் அரச பேருந்துக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றியமை.

அரச பேருந்து சாரதியையும் நடத்துனரையும் கம்பிகளால் தாக்க வந்ததாக இலங்கை போக்குவரத்து சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய மூன்று காரணங்களை முன்வைத்து இவர்கள் சேவையில் இருந்து இடை நிருத்தப்பட்டுள்ளனர்.
 
 

எனினும் குறித்த காரணங்களில் முதல் சம்பவம் தவிர்ந்த ஏனைய இரண்டையும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்று சாரதியும் நடத்துநரும் தெரிவித்ததை தொடர்ந்து எந்தவித விசாரணைகளும் இன்றி சேவையிலிருந்து இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பேருந்து சாரதியும் நடத்துநரும் ஆரம்பித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பேருந்துக்களும் சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளோம், அவர்கள் சாதகமான பதில் பதில் வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.
 
இருப்பினும் எமது பேருந்து சங்கமும், பேருந்து உரிமையாளர்களும் இந்த பணிப் புறக்கணிப்புக்கு பூரண ஆதரவு வழங்காத போதிலும் சாரதி, நடத்துநரை எதிர்க்க முடியாது என்பதனால் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.