பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2014


மதுரை : அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் வினோதம்மாள் (வயது 18).  இவரது சகோதரர் யோகேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு
விபத்தில் இறந்து விட்டார். அதுமுதல் வினோதம்மாள் சோகத்தில் இருந்துள்ளார்.


பாசத்துடன் பழகி வந்த சகோதரர் பரிதாபமாக இறந்த வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வினோதம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.