பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014

பிரபாகரன் தப்பி செல்ல உதவ  இந்தியாவோ அமெரிக்காவோ முன்வரவில்லை -ரோஹித போகொல்லாகம 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சில தரப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை காப்பாற்ற முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடனான உறவுகள் தொடர்ந்தும் வலுவாகவே காணப்படுகின்றது. கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் முனைப்புக்களுக்கு பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் சரணடைவதன் மூலம் யுத்த சேதங்களை தவிர்க்க முடியும் என சில நாடுகள் கருதியதாகவும் அதற்காக சில நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு நாட்டின் தூதுவர் குமரன் பத்மநாதனை மலேஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.