பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை- சுட்டிக்காட்டினார் அரச அதிபர் 
தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

 
இன்று காலை 9.30 மணியளவில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே  அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிறுவர் துஸ்பிரயோகம் தற்போது அதிகளவில் பாடசாலைகளிலே இடம்பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது தனியார் வகுப்புக்களிலும் பாடசாலைகளிலும் போதைவஸ்து பாவனையும் இடம்பெற்று வருவதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.