ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து
பல இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். எனினும் சில இளைஞர்கள் இங்கே பேச ஆரம்பித்தபோதும் அவர்களை பேசவிடாது சில அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள்.
இன் நிலை இவ்வாறு இருக்க சில ஈழத் தமிழர்களும் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. லண்டனில் வசிக்கும் சில தமிழ் இளையோர்கள் இலங்கை சென்று இம் மாநாட்டில் ஓசைபடாமல் கலந்துகொண்டுவிட்டு தற்போது லண்டன் திரும்பியுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.