பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றது.
வழக்கு விசாரணைகளில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தம்மி லுவிஸ்ஹேவா சாட்சியமளித்திருந்தார்.

ஷெய்க்கின் காதலி விக்டோரியா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த போது விக்டோரியா பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த காரணத்தினால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து விக்டோரியா மறந்திருக்கலாம்.
விக்டோரியாவின் நெஞ்சுப் பகுதி மிகவும் மோசமான வகையில் கடிக்கப்பட்டிருந்தது. மனிதர்களினால் இந்த கடி காயங்கள் ஏற்பட்டிருந்தன.
மேலும், விக்டோரியாவின் அந்தரங்க உறுப்புக்களில் நகக் கீறல்கள் காணப்பட்டன.
இதன் மூலம் விக்டோரியா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.
விக்டோரியாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விக்டோரியா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என அரசாங்கத் தரப்பினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.