பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல் 
கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான
குயின்ஸ்ரன் பெர்னாண்டோ மன்றில் சாட்சியமளித்தார்.

கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி பாதிரிமார்கள் இருவரும் மன்றிற்கு சமுகமளித்திருந்ததுடன் கொன்சலிற்றாவின் சாவு குறித்தும் சாட்சியமளித்திருந்தனர். அதன்போதே பாதிரியார் குயின்ஸ்ரன்  பெர்னாண்டோ மேற்கண்டவாறு மன்றில் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

நான் பெரியகோயிலினுடைய பாதிரியாக கடந்த 2 வருடங்களாக உள்ளேன். அங்கே மறைகல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 500 மாணவர்களும் 30 தொடக்கம் 35 வரையான ஆசிரியர்களும் உள்ளனர்.

அதன்படி மறைக்கல்வி ஆசிரியர்களுள் ஒருவராக கடந்த நவம்பர் மாதம் முதல் கொன்சலிற்றா இருந்தவர். கடந்த ஒன்றரை மாதங்களாக கொன்சலிற்றா சமுகம் தரவில்லை.

எனினும் ஆசிரியர்களாக பலர் வருவார்கள் போவார்கள் அதனால் அவர் சமுகம் தராதமை குறித்து நான் தேடவில்லை. அதுபற்றி எனக்கு தெரியாது. சக ஆசிரியர்களே அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

மறைக்கல்வி தொடர்பான விடயங்களை தெரிவிப்பதற்கு சிலவேளைகளில் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளேன். அத்துடன் தேவை கருதியும் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளேன். எனினும் கொன்சலிற்றா இறப்பதற்கு முன் ஒன்றரை மாதங்களாக தொடர்பு கொள்ளவில்லை.

இருப்பினும் கொன்சலிற்றா கிணற்றுக்குள் இறந்த நிலையில் இருந்தமை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி 3 மணிக்கு மக்கள் கூறியே தெரியும்.  எனினும் மறையாசிரியர் என்பதைத் தவிர எனக்கும் கொன்சலிற்றாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

அத்துடன் சாதாரண தொடர்பை வைத்துக்கொண்டு கொன்சலிற்றாவின் பெற்றோரும், ஊடகங்களுமே பெரிதாக்கியுள்ளன. இவர்கள் கூறுமளவிற்கு எந்தவிதமான விடயமும் இல்லை என்றார்.