பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014

சீனா சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு



சீனாவின் செங்ஹய் விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
சீன மாநகர சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹுவேங்ரொங் மற்றும் சீனாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
சீன ஜனாதிபதியினால் இன்று மாலை வழங்கப்படும் இரவு விருந்துபசாரத்திலும், கலாசார நிகழ்விலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொள்வார். அத்துடன் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீனவுக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலணிப் பிரதானி காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன, லெப்டினனட் யோஷித ராஜபக்ஷ ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.