பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014

விஜயகாந்தை கட்டி அணைத்த மோடி

பாராளுமன்ற மைய அரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த நரேந்திர மோடியை புதிய எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பாராளுமன்ற பா.ஜ.க. எம்.பி.க்களின் தலைவராக நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதன் மூலம் பா.ஜ.க. சார்பில் பிரதமர் பதவிக்கு மோடி தேர்வாகி உள்ளார். 
புதிய அரசு அமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை நரேந்திர மோடிக்கு வழங்கும் தீர்மானமும் இன்று பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை அத்வானி முன்மொழிய முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு வழிமொழிந்தனர். 
கூட்டணிக்கட்சி தலைவர்களும் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷும் மோடிக்கு வாழ்த்து தெரிவித் தனர்.  விஜயகாந்தை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் மோடி.