பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேயார் அணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் அணிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.


கடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி வெற்றி பெற்றதை எதிர்த்து கலைப்புலி தாணு வழக்கு தொடர்ந்தார். தாணு கோரிக்கையை ஏற்று சென்னையில் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சண்முகம் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கேயார் அணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 
தீர்மானத்தின் மீது கேயார் அணிக்கு எதிராக 261, ஆதரவாக 186 வாக்குகள் பதிவாகின. மொத்தம் பதிவான 449 வாக்குகளில் 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.