பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2014

சுன்னாகம் வயல் கிணற்றில் இருந்து சடலம் 
 சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்  இன்று மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

 
வீதியால் சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து அருகில் உள்ள கிணற்றை பார்வையிட்ட போது  சடலம் ஒன்று கிணற்றில் மிதப்பதைக் கண்டு சுன்னாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
 
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கிணற்றில் 3 நாட்களுக்கு முன்னர் வீழ்ந்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.