பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014

வடக்கில் மீண்டும் ரயில் விபத்க்து .பளை நோக்கி வந்த கடுகதி ரயில் பனிச்சன்குளம் பகுதியில் யானையுடன் மோதியது 
கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலில் பனிச்சன்குளம் பகுதியில் யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 
நேற்றிரவு 9.10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் ரயிலின் முன்பக்க பிரதான மின் குமிழ்களும் சேதமடைந்துள்ளதுடன் யானையும் உயிரிழந்துள்ளது.  
 
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவது-
 
நேற்று மதியம் மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு பளைநோக்கி வந்து கொண்டிருந்த ரயில் மாங்குளம் ரயில் நிலையத்தில் தரித்து புறப்பட்ட ரயில்  9.10 மணியளவில் பனிச்சன்குளம் பகுதியில் யானையுடன் மோதி பிரதான இரு மின் குமிழ்களும் சேதமடைந்துள்ளன.