பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014


மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார். 

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
மேலும், விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.