பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014

யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்கம் 
யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். அதனை, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உறுதிப்படுத்தினார். கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்