பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

கிளி.மாவட்டத்தில் 3,504 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு 
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில்  8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள்  பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 
தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசினால் செயற்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் ஊடாக  கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

அதன்படி தற்போது 3,504 வீடுகள் அமைக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2,636 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன் 2,210 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 540 வீடுகளும், கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1,914 வீடுகளும், பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 768 வீடுகளும் , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 282 வீடுகளுமாக 3,504 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.