பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

ஆண் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் பயிற்சியாளர்
பிரான்ஸிலுள்ள  உதைபந்து விளையாட்டு கழகமொன்று  ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

 
ஆண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெண் பயிற்சியாளர் பயிற்சி அளிக்க வழங்கப்படும்  நியமனங்களில் மிக உயர்ந்த மட்டத்திலான ஒரு நியமனமாக கருதப்படுகின்றது. 
 
 
பிரெஞ்சு உதைபந்து லீகில், இரண்டாம் பிரிவினில் இருக்கும் கிளெர்மாண்ட் அணிக்கு ஹெலினா கோஸ்ட்டா இப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் தாய்நாடான போர்ச்சுகலில் கீழ் மட்டத்திலான ஒரு ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
 
 
அதுமட்டுமல்லாமல் ஹெலினா கோஸ்ட்டா இதற்கு முன்னர் கத்தார் மற்றும் இராக் நாட்டின் மகளிர் உதைபந்து அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
 
இந்த நிலையில் அவரது நியமனத்தை அந்த உதைபந்து அணியின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.