பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014


10 புலித் தலைவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க மலேசியா நடவடிக்கை?
பத்து தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயா என்ற ஜெயலக்ஷ்மி கோவிந்தசாமி, பொன்குளி வீரமன், கரிகாலன் என்ற சிவலிங்கம் சரவணன், பெருமாள் சின்னத்தம்பி, மொஹான் பெரியசாமி, குமார் என்ற ஜெயகுமார் வையாபுரி, பெருமாள் என்ற ராமையா திருமாவளவன், மதிநாராயணன் என்ற செல்வமலர் ஐயாத்துரை, காந்தன் என்ற தவராஜா லக்ஷ்மி ஆகியோரே மலேசியாவில் மறைந்திருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மலேசிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதை நிறுத்துமாறு கோரி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மலேசிய பொலிஸ்சுக்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் திவயின கூறியுள்ளது.