பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014


பருத்தித்துறையில் சமையலறை புகைக்கூட்டின் கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு
யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது 8 அடி ஆழம் 6 அடி அகலமும் கொண்ட பதுங்குகுழியினை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த வீடானது கடந்த 95ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் பயன்பாட்டில் இருந்த காரணத்தினால் இந்த பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் கருதுகின்றனர்.
குறித்த வீட்டில் தற்போது குடியிருப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் எனவும்,  வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.