பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014


கட்டடம் இடிந்த சம்பவத்தில்பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

சென்னை முகலிவாக்கத்தில் சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலியானவர்களின்
எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் வழங்கவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.