பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2014

அவுஸ்திரேலியா சென்ற ஈழத்தமிழர்களின் படகு நடுக்கடலில் பழுது 
தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். 

 
தமிழகத்தைச் சேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள் 153 பேர் கடந்த 13 ம் திகதியன்று புதுச்சேரி அருகே இருந்து படகு ஒன்றின் மூலம்  அகதிகளாக அடைக்கலம் கோரி ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டு சென்றனர். 
 
இவர்கள் சென்ற படகு, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகள் அருகே செல்லும் போது திடீரென பழுதடைந்து மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
குறித்த படகில் 37 குழந்தைகள், 32 பெண்களும் உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றுமாறு ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
இதேவேளை இத்தகைய ஆபத்தான படகு பயணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளதால் உடனடியாக அனைவரையும் காப்பாற்றுமாறு தமிழர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.